--- --:--:-- --

28-ம் தேதிக்குள் முடிவு – பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்

5

திராவிட கட்சிகளோடுதான் கூட்டணி இருக்கும்; 28ம் தேதிக்குள் எந்த வாகனத்தில் (கூட்டணியில்) பயணிக்கிறோம் என்பது தெரிந்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியினர் இரண்டு தரப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில், அன்புமணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோடு கை கோர்த்த நிலையில், ராமதாஸின் கூட்டணி நிலைப்பாடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மாவட்ட செயலாளர்கள் மாநில பொறுப்பாளர்களை கூட்டி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் எப்படி பணியாற்றுவது, எந்த மாதிரி யுக்திகளை கையாள்வது குறித்து கேட்டு எல்லோரும் அதன்படி செயல்பட கேட்டுக்கொள்ள கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது” என்றார்.

 

இன்றைக்கு யாருடன் கூட்டணி முடிவு செய்யப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசும்போது, “இன்றைக்கு முடிவு செய்ய முடியாது.

 

அதற்கான காலம் சரியாக அமையவில்லை” என்றார்.அண்மையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்த ராமதாஸ், தங்களுக்கான வாகனம் தங்கள் அருகே வந்து விட்டதாக கூறியிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, “அது தேர்தல் வாகனம்தான். 28-ம் தேதிக்குள் தெரியும்; எந்த வாகனத்தில் செல்கிறோம் என என்றும் அவர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon