கொளத்தூர், எடப்பாடி, சேப்பாக்கம் தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள்?
தமிழ்நாட்டில் சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் படி, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் நிலையில் எஸ்ஐஆருக்கு முன் இருந்த 2,90,653 வாக்காளர்கள் எண்ணிக்கை இறுதி பட்டியலில் 2,07,251 ஆக மாற்றமடைந்துள்ளது.
83,402 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி கே. பழனிசாமி தொடர்புடைய தொகுதியில் எஸ்ஐஆருக்கு முன் 2,93,749 இருந்த வாக்காளர்கள் இறுதி பட்டியலில் 2,74,054 ஆக உள்ளனர்.
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் நிலையில், 2,40,087 இருந்த வாக்காளர்கள் இறுதி பட்டியலில் 1,63,886 ஆகவும், 76,201 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஆண்கள் 2,77,38,925, பெண்கள் 2,89,60,838, மூன்றாம் பாலினத்தவர் 7,617 என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர்.





