--- --:--:-- --

வேலூரில் இன்று நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்..!

1

வேலூரில் விஜய் இன்று பங்கேற்கும் கூட்டத்தில் நிர்வாகிகள் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறவுள்ளது.

 

தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசும் நிலையில், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கவில்லை என்றும், அவர்கள் கண்டிப்பாக வர வேண்டாம் என பொதுச் செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், வேலூர் கூட்டத்தில், நிர்வாகிகளின் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜயின் பரப்புரை வாகனம் நேற்றிரவு வேலூர் கொண்டுவரப்பட்டது.

Right Menu Icon