மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்பதை தாண்டி தற்போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக சரிந்தது. து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சரிந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.12,100க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.96,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.





