--- --:--:-- --

தை மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!

4

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாத என்ற சூழல் இருந்து வருகிறது. புத்தாண்டு பிறந்த முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில், தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.106,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,230க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.318க்கும், கிலோவுக்கு ரூ.8000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,18,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon