--- --:--:-- --

மத போதையை ஒழிக்க போராடுவோம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

4

த நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை. இந்நிலையில், வைகோவின் நடைப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வைகோவின் கால் படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் பிரச்னைகளுக்காக நடைபயணம் சென்றவர்.

 

அவரது நெஞ்சுரத்தையும், ஸ்டமினாவையும் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா? அல்லது 28 வயதா என்று நமக்கெல்லாம் ஆச்சர்யப்பட தோன்றுகிறது என்றார். மேலும் இந்தியாவிற்குள் போதைப் பொருள் கடத்தி வரப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றார். போதைப் பொருள் நெட்வொர்க்கை ஒழித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். மேலும் அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மீகத்தை சிலர் வம்பு செய்ய சொல்லி தருவதாக விமர்சித்தார்.

முன்னதாக பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் சாதி மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்வதாக குறிப்பிட்டார். திருச்சியில் தொடங்கிய நடைப்பயணத்தை வரும் 12 ஆம் தேதி மதுரையில் வைகோ நிறைவு செய்கிறார்.

Right Menu Icon