அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!
2025ஆம் ஆண்டு முழுவதுமே தங்கம் விலை பல மாற்றத்தை கண்டது. அதுவும் இந்த ஆண்டில் தான் புதிய புதிய உச்சத்தை தொட்டு நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது.
அந்த வகையில் வருட கடைசி நாட்களில் தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதால் நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். தொடர்ச்சியாக 6 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.
அதன் படி நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புத்தாண்டிற்கு நகை வாங்க விரும்புபவர்களுக்கு சாதகமாக இந்த இனிப்பான செய்தி வந்துள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.10,470க்கும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.83,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.258க்கும், ஒரு கிலோ ரூ.2,58,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





