--- --:--:-- --

தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் எவ்வளவு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன?

1

மிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி, எதிர்க்கட்சித் தலைவரின் எடப்பாடி தொகுதி உள்ளிட்டவற்றில் எவ்வளவு பேர் நீக்கப்பட்டுள்ளனர் எனும் விவரம் வெளியாகியுள்ளது.

 

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பாக தமிழ்நாட்டில் அக்டோபர் 27 வரை இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587. எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பிறகு இன்று வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 43 லட்சத்து 76,755 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 06,332, ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63,233, மூன்றாம் பாலினத்தவர் 7,191, மாற்றுத்திறனாளிகள் 4,19,355 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்.ஐ.ஆரில், இறந்தவர்களின் எண்ணிக்கை 26,94,672, இடம் பெயர்ந்தவர்கள் 66,44,881, இரட்டைப் பதிவு 3,39,278 எனத் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் இருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 812 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது 35.71 சதவீதம் பேர் பழைய வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 841 பேர் உள்ளனர்.

 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில், 26 ஆயிரத்து 375 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அங்கு எஸ்.ஐ.ஆருக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 374 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில், 89 ஆயிரத்து 241 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு எஸ்.ஐ.ஆருக்கு முன்பு 2 லட்சத்து 40 ஆயிரத்து 87 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 846-ஆக குறைந்துள்ளது.

 

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நெல்லை தொகுதியில், 42 ஆயிரத்து 119 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். வரைவு வாக்காளர் பட்டியலில், 2 லட்சத்து 63 ஆயிரத்து 685 பேர் இடம் பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon