--- --:--:-- --

குட்ட குட்ட குனிய மாட்டோம், நிமிர்ந்து நடைபோடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

2

குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு திமுக எம்பிக்களுடன் ஆலோசனை நடத்திய பின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது சரியா? என்று வினவியுள்ளார்.

 

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை – தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல என்றும் சாடியுள்ளார்.
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ள முதலமைச்சர். மத்திய அரசின் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11 புள்ளி ஒன்று ஒன்பது விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என்று சூளுரைத்துள்ள முதலமைச்சர், நெல் ஈரப்பத வரம்பை உயர்த்தாதது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் மத்திய பாஜக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon