--- --:--:-- --

இலவச லேப்டாப் திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பமா..?

3

மிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. அந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இணையத்தில் வெளியான தகவலில், “தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025 விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது.
எங்கள் திட்டம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும், சொந்தமாக – மடிக்கணினி வாங்க முடியாத, ஆனால் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த மடிக்கணினி தேவைப்படும் நபர்களுக்கு திறந்திருக்கும்.

விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன! விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கிவிட்டனர். காலக்கெடு:11/22/2025” என்று வெளியானது.

இந்நிலையில், இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இணையத்தில் வெளியான இந்த தகவல் உண்மையில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Right Menu Icon