பஹல்காம் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை..!
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 26 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்ற தகவல்கள் முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கும், டி.ஆர்.எஃப் அமைப்பிற்கும் தொடர்பு இல்லை என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல என்றும் டி.ஆர்.எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




