--- --:--:-- --

பொய் சொல்லி இனி யாரையும் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் – தவெக தலைவர் விஜய்

1

கடந்த மார்ச் மாதம் தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டிய அக்கட்சித் தலைவர் விஜய், ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கட்சியின் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு கோவையில் நடத்தப்படும் என அறிவித்தார்.

 

அதன்படி இன்று கோவை தனியார் கல்லூரியில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 7 மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்த கருத்தரங்கில் பங்கேற்க சென்னையிலிருந்து விமான நிலையத்திற்கு வந்த விஜய், கோவையிலிருந்து தனியார் விடுதியில் ஓய்வெடுத்து, அங்கிருந்து மக்கள் சூழ கருத்தரங்கிற்கு வந்தார்.இந்த கருத்தரங்கில் பேசிய விஜய், ”இது வோட்டுக்காக மட்டும் நடக்கும் மாநாடு இல்லை. மக்களோடு மக்களாக நாம் எப்படி ஒன்றிணையப் போகிறோம் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி பட்டறை.

 

இதற்கு முன்னர் இங்கு பலர் வந்து மக்களை ஏமாற்றி பொய்களை சொல்லி இருக்கலாம். இனி அது நடக்காது.நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரருக்கு சமம். நாம் எப்படிப்பட்ட ஆட்சி அமைப்போம் என்பதை மக்களிடம் சொல்லுங்கள். நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை உள்ளது. அர்ப்பணிப்பு குணம் உள்ளது. களம் ரெடியாக உள்ளது. போய் கலக்குங்க” என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon