மயானத்தில் திடீரென எழுந்து அமர்ந்த உடல்..!
துவரங்குறிச்சி அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு தூக்கி செல்லப்பட்ட மூதாட்டி திடீரென உயிருடன் எழுந்து அமர்ந்ததால் உறவினர்கள் பீதியில் உறைந்து போயினர்.
திருச்சி மாவட்டம் குமரகுறிச்சியை சேர்ந்த அம்மாள் இதற்கான 16ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் உறவினர்கள் சின்னமாளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பிறர் மூதாட்டி இறந்துவிட்டதாக கருதி உறவினர்கள் மயான பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
அங்கு அவரது இறுதி சடங்குக்காக ஏற்பாடு நடத்த இருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூதாட்டி சின்னம்மா திடீரென கண் விழித்து எழுந்து அமர்ந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





