‘வேட்டையன்’ First View விமர்சனம்
ஞானவேலின் சமூக நீதி பார்வையில் ரஜினியின் கமர்ஷியல் படம் என வேட்டையனை சொல்லலாம். ரஜினி, அமிதாப் ஆகியோரது அசுரத்தனமான ஸ்கிரீன் பிரசன்ஸ் சிறப்பு காட்சியைப் பார்த்தவர்களை கவர்ந்துள்ளது.
என்கவுன்டருக்கு எதிராக மட்டுமல்ல கல்வியில் நடக்கும் ஊழலையும் படம் பேசி இருக்கிறது. குற்ற விசாரணையாக நகரும் முதல் பாதி மிரள வைத்துள்ளதாகக் கூறும் பார்வையாளர்கள், 2ஆம் பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது என்கின்றனர்.





