வரும் 2ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..!
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செப்டம்பர் இரண்டாம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரிடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த இரண்டு நாட்கள் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா கரையோரம் போகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





