பிரபல நடிகை ரேகா நாயகரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு..!
சென்னையில் பிரபல நடிகை ரேகாவிற்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் அந்த பகுதியில் சாலையை கடந்தாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக கார் ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்து கிண்டி போக்குவரத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரபல நடிகையான ரேகாவிற்கு சொந்தமானது என தெரிய வந்தது.





