சேலத்திலிருந்து நான்கு நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை..!
சேலத்தில் இருந்து நான்கு நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகரித்துள்ளது.
நடப்பு மாதத்தில் மட்டும் பத்தாயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இதனால் சேலம் விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி, மும்பை, சீரடி, திருப்பதி நகரங்களுக்கான விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





