திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போலி மருத்துவர் கைது..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாப்பனூத்து பிரிவில், கடந்த 20 நாட்களாக ஹரி மருத்துவ சிகிச்சை மையம் என்ற பெயரில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவர், பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்து வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த, திருப்பூர் மாவட்டம் மருத்துவம், ஊரகம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் கலாமணிநேற்று மதியம் சோதனை செய்தார். அப்போது எம் காம் படித்துவிட்டு, போலியாக மருத்துவ சிகிச்சை செய்வதை உறுதி செய்தார்.
இதனை அடுத்து தளி காவல்துறையினர் முன்னிலையில் மருத்துவ சிகிச்சை மையத்திற்க்கு சீல் வைத்துள்ளார். தொடர்ந்து தவமணி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவர் மீது குடிமங்கலம் காவல் நிலையத்தில், இதே போன்று, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறு பகுதியில் போலி மருத்துவம் பார்த்து கைதாகி வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் மீண்டும் மருத்துவமனையை திறந்து மாட்டிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X