முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் புயல் குறித்து பேசினேன் : அமித்ஷா
மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக அழைத்து கேட்டிருந்தார். முதல்வர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.
உடனடி நிவாரண பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் அளவில் மத்திய அரசிடம் கேட்கப்படும் என தெரிவித்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சர் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதே போல உள்துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு புதுச்சேரியில் புயல் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்பொழுது புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் முடித்து விடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





