--- --:--:-- --

ஆசிட் ஏற்றி சென்ற லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து..!

6

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிட் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. பர்கூர் அடுத்த நாயகனப்பள்ளி பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று மேலூரை நோக்கி பயணித்துள்ளது.

 

ஆசிட் டேங்கர் லாரியை வாலாஜா பகுதியை சேர்ந்த ஆதித்யா என்பவர் இயக்கி சென்றிருக்கிறார். அப்பொழுது இரும்பு ராடுகளை ஏற்றி சென்று வந்த கண்டைனர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது மோது விபத்திற்கு உள்ளானது.

 

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியை இயக்கிய வடமாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் காவல்துறையினர் ஓட்டுநரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon