--- --:--:-- --

சபரிமலைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்..!

2

சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான ரெட் லைட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும் இடுக்கி திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்து திருவனந்தபுரம் வானிலை மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

 

ரெட் அலர்டை எச்சரிக்கை காரணமாக பத்தினம் திட்டா மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

காவல்துறை மற்றும் பிற பேரிடர் மீட்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளும் துவங்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon