மூன்று வாகனங்கள் மீது தாறுமாறாக மோதிய சொகுசு கார்..!
சாலையில் நின்று கொண்டிருந்த மூன்று வாகனங்கள் மீது சொகுசு கார் தாறுமாறாக மோதி சென்ற பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. சாலையில் பச்சை சிக்னல்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தது.
இதில் பின்னால் இருந்து தாறுமாறாக வந்து சொகுசு கார் ஒன்று சிக்னலை மதிக்காமல் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை இடித்து தள்ளி ஒருத்தர் மீது ஏறி சென்ற விபத்தின் காட்சி ஒரு டேஷ் போர்டு கேமராவில் பதிவானது.
இந்த விபத்தில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து சொகுசு கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





