மின்கம்பத்தின் மீது முறிந்து விழுந்த மரம்..!
மயிலாடுதுறை அருகே 75 ஆண்டுகள் பழமையான பெரிய புளியமரம் வேரோடு சாய்ந்தது. மின்கம்பத்தில் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்துள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அந்த பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





