முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்..!
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஐவர் குழு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவது தொடர்பான திட்டத்தை பாரதிய ஜனதா உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதை சமர்ப்பிக்க மாநிலத் துணைத் தலைவர் நாகராஜன் தலைமையில் ஐந்து பேர் முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாளை சந்திப்பதற்கு ஒதுக்கி தருமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





