--- --:--:-- --

இரண்டாவது மனைவியுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய டி.இமான்

11

தமிழ் சினிமா ரசிகர்கள் கவனிக்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் டி.இமான். இவரது இசையமைப்பில் வெளியான மெலோடி பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

 

அதிலும் கும்பி திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. 2001ம் ஆண்டு விஜய் நடித்த தமிழக் திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த இவரது பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

 

மிகக் குறைந்த காலத்திலேயே 25 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதித்தார். தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி பட படங்களில் இசையமைத்திருக்கிறார். பல விருதுகள் பெற்றுள்ள டி.இமான் இதுவரை 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.

 

2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்த டி,இமானுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். இந்த நிலையில் தான் கடந்த வருடம் டி.இமான், எமிலி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.தற்போது அவருடன் தனது முதல் திருமண நாளை கொண்டாடிய டி.இமான் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon