--- --:--:-- --

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர் கவனம் – நிர்மலா சீதாராமன்

4

விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் நிதி அமைச்சர் அதிகரித்துள்ள விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

உதாரணமாக பருப்பு வகைகளை அதிக அளவில் விளைவிக்க விவசாயிகளுக்கு ஊக்கம் தரப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அதன் உற்பத்தி அதிகரித்து விலை கட்டுக்குள் வரும் என்றும் அமைச்சர் விளக்கினார்.

 

அதேநேரம் உடனடி விலை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பருப்பு வகைகளை அதிகளவில் இறக்குமதி செய்வதாகவும் அதற்கான இறக்குமதி வரியை குறைத்தும் அல்லது முற்றிலும் நீக்கியோ நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

 

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே கோதுமை, பருப்புகள் உள்ளிட்ட தானிய வகைகளின் விலை அடுத்த ஆண்டும் குறைய வாய்ப்பில்லை என சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon