--- --:--:-- --

வாக்காளர்களுக்கு கொலுசு விநியோகிக்கப்பட்டது உண்மையா..?

3

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசுகள் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக புகார் அளிந்துள்ள நிலையில் அதனை பறக்கும் படையினர் மறுத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர், கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

 

ஆளும் கூட்டணி மீது எதிர் கட்சியினரும், அதிமுக மீது திமுகவினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டினார். இதையடுத்து பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய பாதுகாப்பு படையினருடன் சென்று அவர்கள் ஆய்வு செய்தனர். இதில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

4 மணி நேரம் இந்த சோதனைகள் நடந்தன. இதனையடுத்து கொலுசுகள் விநியோகம் என்ற புகாரில் உண்மையில்லை என்று தெரிவித்த பறக்கும் படையினர் கண்காணிப்புகள் தீவிரபடுத்தப்படும் என்று கூறினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon