சிவராத்திரியின் பொழுது கோபுரத்தில் வந்து ஆடிய பாம்பு..!
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் குவிந்து வந்த நிலையில் மேளதாளங்கள் முழங்க சிவராத்திரி பூஜை நடத்தப்பட்டது.
ஒலிபெருக்கியில் பக்தி பாடல்கள் நடத்தப்பட்டன. அப்பொழுது கோபுரத்தின் உச்சியில் பாம்பு ஒன்று தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடியது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாம்பு உருவில் வந்து சிவராத்திரி விழாவில் சாமியே கலந்து கொண்டதாக பக்தர்கள் பரவசத்தில் வந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





