மர்மமான முறையில் உயிரிழந்த கட்டிட தொழிலாளி..!
கன்னியாகுமரி அருகே கட்டிட தொழிலாளி ஒருவர் சாலையில் உயிரிழந்து கடந்த நிலையில் அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமங்கலம் அருகே வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி.
இவருக்கு முருகம்மாள் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற ராஜ துரையை காணவில்லை எனக்கூறி அவரது குடும்பத்தார்கள் விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜதுரை அருகில் உள்ள மேல கிருஷ்ணன் புதூரில் சாலையில் இறந்து கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்பொழுது அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கும் வீடியோவை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.





