--- --:--:-- --

பெங்களூரு தப்ப முயன்ற யூடியூபர் TTF வாசன் கைது..!

2

கோவையில் இருந்து பெங்களூரு தப்ப முயன்ற யூடியூபர் TTF வாசனை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக ஓட்டி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக யூடியூபர் வாசன் மீது கோவை போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தன.

 

போத்தனூரில் பதிவான வழக்கிற்காக கடந்த 27ஆம் தேதி TTF வாசன் கோவை மதுக்கரை தாலுகாவில் விசாரணைக்கு வந்தால் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பிரச்சனை தொடர்பாக அப்போது அவர் பெங்களூருக்கு செல்ல முயன்றது தெரிய வந்ததால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 

Right Menu Icon