தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?
வரலாற்றையே புரட்டி போட்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டுமா என்ற நிலை கடந்து ரூ.2 லட்சத்தை தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நகை பிரியர்கள் இருக்கின்றனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் அதிரடியாக உயர்ந்தது. கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனையாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




