--- --:--:-- --

திமுகவுடன் கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?” – எஸ்.பி. வேலுமணி

6

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் இன்று கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பங்கேற்று பேசிய எஸ்.பி. வேலுமணி, “தவெகவுக்கு ஆதரவளித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுக கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?” என கேள்வி எழுப்பினார்.

 

கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது; “எங்களைப் பொறுத்தவரையில் அதிமுக நன்றாக இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு ஐந்து வருடம் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தால், அடுத்து ஆளும் கட்சியாக வரும். ஆனால், தற்போது ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை என விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூட்டச் சொல்லி கேட்டோம். எடப்பாடி பழனிசாமியும் கூட்டுவதாகத்தான் சொன்னார்.

 

திமுக – அதிமுக கூட்டணி என்பதுதான் பிரச்சனையின் ஆரம்பம். தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஆனால், திமுக எதிர்ப்பின் காரணமாகவே தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

 

 

அதன்பிறகு அதிமுக பொதுச் செயலாளருடன் சமாதானமாகிவிட்டோம். அதன்பிறகு கட்சி பொறுப்புகள் வழங்கியதில்தான் முரண்பட்டு இருக்கிறோம். பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளை செய்துவருகிறார். பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பிரச்சனை வரும்போது நான் தான் 25 ஆயிரம் பெண்களை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது” என கேள்வி எழுப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon