--- --:--:-- --

காவிரி விவகாரம் ஆதவு அர்ஜூனாவுக்கு புரியாது: ரகுபதி காட்டம்

9

மேகதாது விவகாரத்தில் தி.மு.க மீது புகார் கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேகதாது வழக்கில் தி.மு.க அரசு சிறப்பாக வாதிட்டது.

 

 

லாட்டரியில் கவனம் செலுத்தும் ஆதவ் அர்ஜுனாவுக்கு காவிரி விவகாரம் புரியாது. எதிர்ப்புகளை பதிவு செய்யவே நடுவர் மன்றம் கோரியது தி.மு.க. கர்நாடகம் செல்ல ஏதாவது காரணம் கூறவேண்டும் என்பதற்காக தி.மு.க மீது குறைகூறுகின்றனர்.

 

 

முரண்பாடுகளின் மொத்த உருவமே த.வெ.க. தான். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காது. காவிரி விவகாரத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது த.வெ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சட்டப்போராட்டத்தில் ஒருபோதும் தி.மு.க அரசு கோட்டைவிட்டதில்லை என்றும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon