திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா..!
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என தரமான படங்கள் நடித்து மக்களின் பாராட்டை பெற்றார். கடைசியாக பத்மப்ரியா ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
தமிழை தாண்டி மலையாளத்திலும் படங்கள் நடித்தவர் கடந்த 2014ம் ஆண்டு ஜஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார். பின் சில ஆண்டுகள் கழித்து மலையாள படங்களில் நடித்து வந்தார்.
திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பத்மப்ரியா குழந்தை பிறந்து 1 வருடம் ஆகி யாருக்கும் தெரிவிக்காத நிலையில் மகனின் முதல் நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




