--- --:--:-- --

விஜய் – டி.கே. சிவகுமார் சந்திப்பு உண்மை இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்

9

ருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை வேளாண் துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தி இருந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “காவிரியின் குறுக்கே ஒருபோதும் அணை கட்ட விடமாட்டோம். அது நமது உரிமை.

 

 

எனவே, அணை கட்டக் கூடாது என்பதற்காக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் கர்நாடகம் செல்கிறார். கர்நாடகத்தில் மழை இல்லை, அதனால் தண்ணீர் தர முடியாது என அவர்கள் தரப்பில் கூறி வருகிறார்கள். ஆனால், நமது உரிமையை முதல்வர் பெற்றுத் தருவார்” எனத் தெரிவித்தார்.

 

 

இந்நிலையில், முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இருவரும் சந்திக்கப்போவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை இல்லை என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “முதல்வர் விஜய் கர்நாடகா சென்று முதல்வர் சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்ற தகவல் உறுதியானது இல்லை. இது குறித்து யார் தகவல் சொன்னாலும் அதில் உண்மை இல்லை” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon