--- --:--:-- --

100 கோடி கொடுத்தாலும் வர மாட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி

13

டிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த கட்டா குஸ்தி 2 படத்திற்கு நல்ல வரவேற்பு சமீபத்தில் கிடைத்து இருந்தது. குறிப்பாக ஐஸ்வர்யா லக்ஷ்மியின் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்திருந்தது.மற்ற ஹீரோயின்களை போல இல்லாமல் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது இல்லை. அவர் அனைத்து கணக்குகளையும் டெலீட் செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.

 

 

யாராவது 100 கோடி கொடுத்தாலும் நான் மீண்டும் சோசியல் மீடியா பக்கம் வர மாட்டேன் என தற்போது ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் தெரிவித்து இருக்கிறார். புகைப்படங்களை மார்பிங் செய்வது, ஆபாசமாக பேசுவது என பல மோசமான விஷயங்களை சந்தித்ததாகவும், மீண்டும் சமூக வலைதளங்கள் பக்கம் வரும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.

 

 

தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியது மன அமைதியை கொடுத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon