--- --:--:-- --

அ.தி.மு.க கூட்டணி: ஐ.ஜே.கே வேட்பாளர்கள் அறிவிப்பு

.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது. பா.ஜ.க. – 27, பா.ம.க. – 18, அ.ம.மு.க. – 11, த.மா.கா. – 5, இந்திய ஜனநாயக கட்சி – 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், சிங்க தமிழர் முன்னேற்றக் கழகம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கிறது.

 

கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 168 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்லாவரம், குன்னம் ஆகிய தொகுதிகள் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசன், குன்னம் தொகுதியில் சரண்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon