புதுச்சேரியில் ரூ. 2,700 கோடி திட்டங்கள்..!
இன்று காலை 11:45 மணியளவில் புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். அங்கு சுமார் ரூ. 2,700 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
போக்குவரத்து மேம்பாடு: ‘பி.எம் இ-பஸ் சேவா’ திட்டத்தின் கீழ் நவீன மின்சார பேருந்துகள் இயக்கம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.
மருத்துவம் மற்றும் கல்வி: ஜிப்மரில் (JIPMER) நவீனப்படுத்தப்பட்ட மண்டல புற்றுநோய் மையம், காரைக்கால் என்.ஐ.டி-யில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரிலான புதிய பொறியியல் கட்டிடம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி கட்டிடங்களை அவர் திறந்து வைக்கிறார்.
தொழில்துறை வளர்ச்சி: காரசூர்-சேதராப்பேட் பகுதியில் 750 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பிரம்மாண்ட தொழிற்பேட்டையை அவர் அர்ப்பணிக்கிறார். இதில் ஐ.டி பார்க், மருந்து மற்றும் ஜவுளி பூங்காக்கள் இடம்பெறவுள்ளன. சுற்றுச்சூழல்: ‘மிஷ்டி’ (MISHTI) திட்டத்தின் கீழ் சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




