--- --:--:-- --

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்..!

9

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருச்சி சிவா உள்ளிட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைவதை முன்னிட்டு இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

 

இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய எம்.எல்.ஏ-க்களின் பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணி 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் எளிதாகப் பெற முடியும். இதனால் தேர்தல் போட்டியின்றி முடியவே அதிக வாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon