--- --:--:-- --

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்பு..!

3

கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பொதுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் ஆண்டுதோறும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

 

மேலும் கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் படிப்புடன், Al, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் குறித்தும், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
அப்போது, கோவை இளைஞர்களின் எண்ணங்கள் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற இலக்கிற்கு புதிய அடித்தளத்தை அமைத்துள்ளதாக கூறினார்.

 

ஸ்டார்ட் அப் முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் உள்ளிட்டவை குறித்த மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். மேலும் தனிமனித ஒழுக்கம் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பை தரும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon