மீண்டும் எகிறும் தங்கம் விலை..!
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை மாலையில் மடமடவென உயர்ந்தது. நேற்றைய மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் விலையும் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.12,350க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.98,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




