அங்கீகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் தேமுதிக..!
கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைக்க வரும் தேர்தலில் 6% வாக்குகள் மற்றும் 8 தொகுதிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. இதற்காக 20 தொகுதிகள் கோரி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் மட்டுமே தர முன்வந்துள்ளன.
இரட்டை இலக்கத் தொகுதிகளைப் பெற்றால் மட்டுமே கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதால், தேமுதிக தலைமை தற்போது முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




