--- --:--:-- --

குறைந்த தங்கம் விலை..!

1

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வரும் நேற்று ஒரே நாளில் மட்டுமே சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.

 

நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ.9,520உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,08,000க்கும், கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.415க்கும்,கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon