--- --:--:-- --

சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி: பிரேமலதா விஜயகாந்த்

10

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

நேற்று (ஜன. 29) குற்றாலம் பிரதான அருவியை பார்வையிட்ட அவர், குற்றாலநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய சூழலில் 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தேமுதிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து, கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon