தங்கம் விலையில் மாற்றம்!
2025-ஆம் ஆண்டு தங்கத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்து பல புதிய உச்சங்களைத் தொட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
2025 ஆம் ஆண்டு தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த நிலையில் 2026 புத்தாண்டின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
அந்த வகையில் ஜனவரி 1ஆம் தேதியான நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,440க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.99,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,490க்கும் சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




