ஒரே நாளில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றது. தொடர்ச்சியாக 6 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை எகிறி கொண்டே இருந்த நிலையில், நேற்று அதிரடியாக குறைந்தது.

 

அதன் படி நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,020க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.360 குறைந்து ஒரு கிராம் ரூ.10,505க்கும் சவரனுக்கு ரூ.2,880 குறைந்து ஒரு சவரன் ரூ.84,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை மட்டுமே ஒரே நாளில் கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,58,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.