விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்..!

புதுச்சேரியில் காலை 10.30 மணிக்கு விஜயின் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. 5,000 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி; பாஸ் இல்லாமல் யாரும் உள்ளேவர முடியாது. விஜய் நிகழ்ச்சிக்கு குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம். விஜய்யின் பொது கூட்டத்திற்கு காலை 10.30 முதல் 12.30 மணி வரை மட்டுமே அனுமதி.

 

விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு 1,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு.பள்ளி நேரம் தொடங்கிய பின்தான் விஜய் வரவேண்டும்; பள்ளி முடிவதற்கு முன் நிகழ்ச்சியை முடித்து விட வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் வருவதைத் தடுக்க தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளோம் என்று டி.ஜி.பி.சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.