--- --:--:-- --

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

2

ங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

 

அதன் படி நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,840க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் மட்டுமே ரூ.12 ஆயிரத்தை தொடவுள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,995க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.79,960க்கும் விற்பனை செய்யபடுகிறது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.192க்கும், ஒரு கிலோ ரூ.1,92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon