இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 40 பேர் உயிரிழப்பு..!
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகினர். மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழ்ந்து தவித்து வருகின்றனர்.
மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





