எஸ்.ஐ.ஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் விநியோகம்..!

மிழகத்தில் 5 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பணிக்காக 68,467 பூத் லெவல் அதிகாரிகள், 2,11,445 பூத் லெவல் முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

அக்.27, 2025-ம் ஆண்டு கணக்கீட்டின் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர் இருக்கின்றனர். இவர்களுக்காக 6 கோடியே 41 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இதுவரை 5 கோடியே 67,000 பேருக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன.